கொரோனா பாதிப்பு உயர்வு; உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு


கொரோனா பாதிப்பு உயர்வு; உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2021 1:28 AM GMT (Updated: 23 March 2021 1:28 AM GMT)

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி கூடங்களும் நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும்.

லக்னோ,

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் சூழலில், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடும்படி பல்வேறு மாநில அரசுகளும் அறிவிப்பு வெளியிட்டு விட்டன.  மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கிற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.  3,036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  5.95 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  கொரோனாவால் 8,759 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் முதல் மந்திரி ஆதித்யநாத் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இதில், 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

இதேபோன்று, தேர்வுகள் நடைபெறாத பிற அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 25ந்தேதி முதல் 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.

Next Story