தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு + "||" + Uttar Pradesh: Two teenage sisters found dead at Pilibhit village

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
பிலிப்பட்

உத்தரப்பிரதேசதத்தின் பிலிப்பட் மாவட்டம் காசிம்பூர் கிராமத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மகள்கள். முறையே 19 மற்றும் 17 வயதுடைய இருவரும் நேற்று  இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையயடுத்து உறவினர்கள் சகோதரிகளைத் தேடியுள்ளனர்.

சகோதரிகளில்  ஒருவர் அருகில் உள்ள ஜசுவாலி என்ற இடத்தில வயல் ஒன்றில் பிணமாகக் கிடந்தார். மற்றொருவர் இன்று  காலை அருகில் உள்ள மரம் ஒன்றில் பிணமாகத் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

ஆனால் இருவரது கழுத்திலும் ஒரே மாதிரியான காயங்கள் இருந்த சம்பவம் பெற்றோர்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இருவரது உடல்களும் பிரேதப பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருவதாகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெய் பிரகாஷ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் கற்பழித்து கொலையா? எலும்பு கூடு மீட்பு
சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. எலும்பு கூடு ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
2. மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு
மதரஸா மாணவர்கள் கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் இதானால் 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.
3. போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகம்
போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகமாடுகின்றனர்
4. உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதியதில் 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
5. உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.