18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா- மத்திய அரசு

18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா- மத்திய அரசு
x
தினத்தந்தி 24 March 2021 11:33 AM GMT (Updated: 24 March 2021 11:33 AM GMT)

இந்தியாவின் 18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் 18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இருந்து 10,787 பேரின் கொரோனா தொற்று மாதிரிகளை சோதனை மேற்கொண்டதில், 771 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த புதிய வகை கொரோனா நாட்டின் 18 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால், கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி போடும் பணியையும் முடுக்கி விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story