தேசிய செய்திகள்

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி + "||" + Nuns Accused Of Conversion, Forced Off Train. Amit Shah Promises Action

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி
உத்தரப் பிரதேசத்தில் ஜான்ஸி நகரில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகரில் ரயில் வந்தபோது, ரயிலில் இருந்த 
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்   அமைப்பினர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்யச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரயிலில் அவர்களைப் பாதுகாப்பாக ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளைப் பாதியிலேயே இறக்கிவிட்ட சம்பவத்துக்கும், அவர்களை அவமானப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவிக்கிறேன். சம்பந்தப்பட்டர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.  

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.  இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், “ ஜான்சியில் கன்னியாஸ்திரிகளை துன்புறுத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்; அமித்ஷா வாக்குறுதி
கூர்க்காக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளதால், அவர்களுக்கு தனி மாநிலம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2. மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை - உதயநிதி ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் தொடர்பான எனது கேள்விகளுக்கு அமித்ஷாவால் பதிலளிக்க முடியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேர் கைது
கடந்த மாதம் 19-ந் தேதி, உத்தரபிரதேசம் வழியாக ஒடிசாவுக்கு 2 கேரள கன்னியாஸ்திரிகள் 2 பெண்களுடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர்.
4. அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மத்திய மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5. மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் என்பதா? அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் எனக்கூறிய அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.