செப்டம்பரில் 2-வது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவிப்பு


செப்டம்பரில் 2-வது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 March 2021 10:40 AM GMT (Updated: 27 March 2021 10:40 AM GMT)

வரும் செப்டம்பரில் தமது இரண்டாவது கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவோவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்சுடன் இணைந்து சீரம் இந்தியா தயாரிக்கிறது. 

இந்த தடுப்பூசியின் சோதனை ஒரு வாரத்திற்கு முன் துவங்கி விட்டதாக அடார் புனேவாலா தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க, பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பூசிக்கு 89 சதவிகித செயல்திறன் இருக்கிறது எனவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் மாதத்திற்குள் கோவோவாக்ஸைத் தொடங்கும் என நம்பிய பூனவல்லா இன்று பிற்பகல் இது செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று டுவீட் செய்துள்ளார்.



Next Story