தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து + "||" + President Ramnath Govind congratulates Holi festival

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது, “சக குடிமக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா, ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் பண்டிகை, இது மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது. இந்த திருவிழா நமது கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.
2. கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
3. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்.
4. 75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.
5. மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து
மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.