தேசிய செய்திகள்

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி கொண்டாட்டம் + "||" + farmers fired bills in holy day in protest

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி கொண்டாட்டம்

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள்  வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி கொண்டாட்டம்
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி கொண்டாடினர்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 124-வது நாளை எட்டியுள்ளது.

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள்  வேளாண் சட்டங்களின் நகலை எரித்து ஹோலி கொண்டாடினர்.

டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் காசிப்பூரில் கடந்த 123 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  விவசாயிகள் இன்று போராட்ட களத்தில் பாட்டுபாடி நடனமாடி ஹோலி கொண்டாடினார்கள்.எங்கள் கோரிக்கையை மத்திய  ஏற்றுக் கொள்ள வேண்டும், மூன்று வேளாண்சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும், அப்போது தான்  நாங்கள் வீட்டிற்குச் செல்வோம் என கூறினர்.

இதனிடையே ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவுக் கழகத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபில் விவசாயிகள் பலர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் 42 இடங்களில் இந்த போராட்டத்தினை விவசாயிகள் முன்னெடுத்திருந்ததாக பாரதிய கிசான் அமைப்பின் செயலாளர் சுகதேவ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற கூட்டத்தொடர் மத்தியில் ஜந்தர் மந்தரை போராட்ட களமாக்கிய விவசாயிகள்
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம், எங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரம் தொடர்ந்து குறைந்து வருகிறது என விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.
2. வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா
வேளாண் சட்டங்களை எதிர்த்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்
அரியானா மாநிலம் தோஹானாவில் கைது செய்த விவசாயிகளை விடுவிக்க கோரி போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4. புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட்
புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.