தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி + "||" + Sharad Pawar Unwell, Will Be Hospitalised On Wednesday For Surgery: NCP

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பித்தப்பையில் கல்  இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதற்காக மார்ச் 31 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவரது கட்சி இன்று தெரிவித்துள்ளது.புற்றுநோயில் இருந்து  தப்பிய 80 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் 2004 ஆம் ஆண்டில் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் வெளியிட்டு உள்ள டுவிட்டில்  பவார் நேற்று மாலை வயிற்றில் சிறிது வலியை உணர்ந்ததாகவும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது.  மேலதிக அறிவிப்பு வரும் வரை அவரது அனைத்து  நிகழ்ச்சிகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவுக்கு எதிராக 15 எதிர்க்கட்சிகள் இணைந்த மாபெரும் அணி; முதல் கூட்டம் தொடங்கியது
பா.ஜனதாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் பா.ஜனதாவுக்கு எதிராக அணிசேரும் 15 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளன.
2. ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க வேண்டும்: தேசியவாத காங்கிரஸ்
அரசியல் சாராத பக்தர்கள் கமிட்டி ராமர் கோவில் கட்டும் செலவை கண்காணிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
3. அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சரத்பவாருடன் தேவேந்திர பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
சரத்பவாரை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. உறுதியற்ற தன்மையில் கூட்டணி அரசு? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே- சரத்பவார் சந்திப்பால் பரபரப்பு
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. மேற்கு வங்க தேர்தல் தோல்வியால் அமித்ஷா பதவி விலகவேண்டும்; தேசியவாத காங்கிரஸ்
மேற்கு வங்க தேர்தல் தோல்வியால் அடுத்து அமித்ஷா பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.