கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு


கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு
x
தினத்தந்தி 29 March 2021 10:52 PM GMT (Updated: 29 March 2021 10:52 PM GMT)

கர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில்  கர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்ஹ்டு அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"அடுத்த 15 நாள்களுக்குப் போராட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, இன்று முதல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொது முடக்கம் இருக்காது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி, கல்லூரிகள் மூடப்போவதில்லை. பள்ளிகளை மூடுவது குறித்து கருத்துகளைக் கேட்டுப் பெற்றுள்ளோம். 15 நாள்களில் தேர்வுகள் முடிந்தவுடன் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story