டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு


டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
x
தினத்தந்தி 30 March 2021 3:45 AM GMT (Updated: 30 March 2021 3:45 AM GMT)

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் கடந்த ஹோலி தினத்தன்று 40.1 டிகிரி வெயில் பதிவானது. 76 ஆண்டுகளில் இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இது அமைந்தது.

 இந்தியாவின் பல பகுதிகளிலும் கோடை கால வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட மார்ச் 28ம் தேதி 40.1 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. இது வழக்கத்திற்கு மாறாக 8 மடங்கு அதிகமான வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

1945ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று டெல்லியில் 40.5 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. 76 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் மார்ச் மாதத்தில் இந்த அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி இருப்பதாக குல்தீப் ஸ்ரீவத்சவா குறிப்பிட்டார்.

கடந்த 3, 4 நாட்களாக காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாகவும், வானம் தெளிவாகொ சூரியன் நீண்ட நேரம் சுட்டெரித்துக்கொண்டிருந்ததும் அதிகபட்ச வெப்பம் பதிவானதற்கு காரணங்களாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதே போல கடந்த 1973 மார்ச் 29ம் தேதி டெல்லியில் 39.6 டிகிரி வெப்பம் பதிவானது. இதுவே மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை வரிசையில் 3வதாகும்.

தற்போது பகலில் அதிகபட்ச வெப்பநிலையும், இரவில் அதிகபட்ச குளிரும் இருப்பதாகவும், வரும் நாட்களில் டெல்லியில் கடுமையான வெப்பம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story