தேசிய செய்திகள்

ராஜஸ்தான் தினம்; 389 சிறை கைதிகள் விடுதலை + "||" + Rajasthan Day; 389 Prisoners released

ராஜஸ்தான் தினம்; 389 சிறை கைதிகள் விடுதலை

ராஜஸ்தான் தினம்; 389 சிறை கைதிகள் விடுதலை
ராஜஸ்தான் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உள்பட 389 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஜெய்ப்பூர்,

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 1949ம் ஆண்டு மார்ச் 30ந்தேதி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டது.  பரப்பளவில் மிக பெரிய மாநிலமான ராஜஸ்தான் அரசர்களின் நிலம் என அறியப்படுகிறது.  இதன் தலைநகராக மிக பெரிய ஜெய்ப்பூர் நகரம் அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் உருவான தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறை கைதிகளை விடுவிப்பது என அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி ஜெய்ப்பூர் மத்திய சிறை போலீஸ் சூப்பிரெண்டு கூறும்பொழுது, 40 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  மொத்தம் 383 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.  அவர்களது ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது.  அவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்.  அவர்கள் இனி கைதிகள் கிடையாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளை
டெல்லியில் குரங்குகளை ஏவி விட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.