கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி செல்கிறது; மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி செல்கிறது; மத்திய அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 March 2021 7:06 PM GMT (Updated: 30 March 2021 7:06 PM GMT)

நாட்டின் கொரோனா நிலவரம், மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தின் பிடியில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி, 

நாட்டின் கொரோனா நிலவரம், மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தின் பிடியில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நாட்டின் கொரோனா நிலவரம், மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களின் நிலைமை பெரிதும் கவலைக்குரியதாக இருக்கிறது. எனவே, எந்த மாநிலமோ, எந்த மாவட்டமோ மெத்தனமாக இருக்கக்கூடாது.

மிக தீவிரமான சூழ்நிலையை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, சில மாவட்டங்களில் அத்தகைய நிலைமை காணப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்த நாடும் ஆபத்தின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கொரோனாவை கட்டுப்படுத்தி, உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆஸ்பத்திரிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் தயார்படுத்தப்பட வேண்டும். பாதிப்பு வேகமாக அதிகரித்தால், ஆஸ்பத்திரிகள் திண்டாடி விடும்” என்றார். 

Next Story