தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு + "||" + Test, Track, Treat only way to control COVID-19 surge: Centre to states

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்:  மத்திய அரசு
இந்தியாவில் கடந்த சில வாரங்காளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிக்ரித்துள்ளது.
புதுடெல்லி,

சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ள டாப் 10 மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 மாவட்டங்கள், மராட்டிய மாநிலத்தில் உள்ளன.

புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், அவுரங்காபாத், நேன்டட், அகமதுநகர் ஆகியவைதான் அந்த மாவட்டங்கள். டெல்லி, பெங்களூரு மாநகர் ஆகிய மாவட்டங்களும் இதில் உள்ளன.

கடந்த வாரம், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு சராசரி விகிதம் 5.65 சதவீதமாக இருந்தது. ஆனால், மராட்டிய மாநிலத்தில் 23 சதவீதமாக இருந்தது. எல்லா மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்படும் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதே சமயத்தில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இன்று (நேற்று) காலை 10 மணி நிலவரப்படி, 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போட்டதில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி, 1-ந்தேதி தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினாா்.


தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி
அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
2. சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
ஜெயங்கொண்டத்தில் உள்ள சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
4. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
5. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியது
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியுள்ளது.