ரெயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது


ரெயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது
x
தினத்தந்தி 31 March 2021 12:35 AM GMT (Updated: 31 March 2021 12:35 AM GMT)

இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ரெயிலில் இனி சார்ஜ் செய்ய முடியாது.

புதுடெல்லி, 

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரெயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரெயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார். மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த 16-ந் தேதி முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்கு ரெயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது.ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்கு ரெயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வேயும் அறிவித்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. ரெயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள ரெயில்வே, அதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரெயில்வே நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story