தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் + "||" + Farmers protest for 126th day demanding repeal of agricultural laws

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 126-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 126-வது நாளை எட்டியுள்ளது. 

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இதனிடையே ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிடுவதாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவுக் கழகத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்
டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார்- நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு
விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருப்பதாக வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
3. டெல்லி எல்லைகளில் 73-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் 73-வது நாளாக வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
4. புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்
புதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சரத்பவார் விமர்சித்து இருந்தார்.
5. அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.