இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்
x
தினத்தந்தி 31 March 2021 5:25 PM IST (Updated: 31 March 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போட்டதில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி, வரும் 1-ந்தேதி முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் டெல்லியில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

''மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் விவரங்களை மாநில சுகாதாரத்துறையினர் அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை'' என கூறினார்.

Next Story