பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 April 2021 3:40 AM GMT (Updated: 1 April 2021 3:40 AM GMT)

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன.

புதுடெல்லி, 

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கடந்தாண்டு ஜூலையில், ஐந்து விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து நவம்பரில் மூன்று விமானங்கள் வந்தன. இந்தாண்டு ஜன., 27ல், மேலும், மூன்று விமானங்கள் வந்து சேர்ந்தன.

இந்நிலையில், நான்காவது கட்டமாக பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன. 

இதுதொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் வெளியான டுவிட்டர் பதிவில், “பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் நடுவழியில் எங்கும் நிற்காமல் புதன்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப் படை விமானங்கள் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த மூன்று விமானங்கள் மேற்குவங்காளத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story