மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்வு: தமிழகத்தில் ரூ.7,579 கோடி வசூல்
தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாதத்தில் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டது முதல், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடி. இது கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது.
தமிழகத்தில் சென்ற ஆண்டு மார்ச்சில் ரூ.6,177 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு ரூ.7,579 கோடி வசூல் ஆகி உள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை விட 23% அதிக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகமாகி உள்ளது.
Related Tags :
Next Story