உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 April 2021 10:32 PM IST (Updated: 1 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,19,783 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் புதிதாக 2,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,19,783 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,820 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் தற்போது 11,918 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூடுதல் சுகாதார துணை செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் இதுவரை 5,99,045 பேர் இதுவரை நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 3.49 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன.  ஒரேநாளில் 1.24 லட்சம் சோதனை செய்யப்பட்டுள்ளன.

45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இதுவரை 11 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story