ஆபாச வீடிேயா விவகாரம்; இளம்பெண்ணிடம் 3வது நாளாக போலீசார் விசாரணை
ஆபாச வீடியோவில் விவகாரத்தில் இளம்பெண்ணிடம் 3-வது நாளாக எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தங்கியிருந்த விடுதி, அடுக்குமாடி குடியிருப்புக்கும் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
பெங்களூரு: ஆபாச வீடியோவில் விவகாரத்தில் இளம்பெண்ணிடம் 3-வது நாளாக எஸ்.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தங்கியிருந்த விடுதி, அடுக்குமாடி குடியிருப்புக்கும் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
நீதிபதி முன்பு ஆஜர்
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள ரமேஷ் ஜார்கிகோளி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரமேஷ் ஜார்கிகோளியுடன் ஆபாச வீடியோவில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண் 28 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த 30-ந் தேதி பெங்களூருவில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார். பின்னர் அவர் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை அதிகாரி கவிதா தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து இளம்பெண்ணை அவர் தங்கி இருந்த ஆர்.டி.நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அறையில் இருந்து ரூ.9 லட்சம் சிக்கியது குறித்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் அதற்கு சரியான முறையில் பதில் எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. பின்னர் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வீடியோ கால் எந்த இடத்தில் இருந்து பேசினீர்கள்? எப்படி அமர்ந்து பேசினீர்கள்?. எத்தனை நாட்களாக விடுதியில் தங்கி இருந்தீர்கள்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர்.
உடைகள் பறிமுதல்
அப்போது ரமேஷ் ஜார்கிகோளியிடம் செல்போனில் வீடியோ கால் பேசிய இடத்தையும், எந்த கோணத்தில் அமர்ந்து பேசினேன் என்றும் இளம்பெண் நடித்து காண்பித்ததாகவும், அதனை போலீசார் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் இளம்பெண் தங்கி இருந்த அறையில் அவரது உடைகள், செல்போன்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் அவற்றை ஆய்வுக்காக மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கும் அனுப்பி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. தங்கும் விடுதியில் சுமார் 3½ மணி நேரம் சோதனை நடந்தது.
இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இளம்பெண்ணை ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்டதால், தங்கும் விடுதியில் சோதனை முடிந்ததும் இளம்பெண்ணை மல்லேசுவரத்தில் உள்ள மந்திரி கிரீன்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதையொட்டி அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தலைமுடி ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளியின் வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற போலீசார் அங்கு வைத்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். அதாவது ரமேஷ் ஜார்கிகோளியை இங்கு வைத்து எப்போது சந்தித்தீர்கள்? எத்தனை முறை 2 பேரும் சந்தித்து பேசினீர்கள்? அவரை சந்திக்கும் போது என்ன உடை அணிந்து வந்தீர்கள்? என்பது உள்பட பல அடுக்கடுக்கான கேள்விகளை இளம்பெண்ணிடம் போலீசார் எழுப்பியதாகவும், அதற்கு இளம்பெண் பதில் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளியின் வீட்டில் இருந்து தலைமுடி உள்ளிட்ட சில பொருட்கள் போலீசாருக்கு கிடைத்ததாகவும், அதை ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story