தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலம் தேறினார் - மந்திரி நவாப் மாலிக் தகவல்


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலம் தேறினார் - மந்திரி நவாப் மாலிக் தகவல்
x
தினத்தந்தி 2 April 2021 3:09 AM IST (Updated: 2 April 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

பித்தப்பை கல்நீக்க சிகிச்சைக்குப் பிறகு சரத்பவார் உடல்நலம் தற்போது நலமாக உள்ளதாக மந்திரி நவாப் மாலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் கல்நீக்கம் செய்யப்பட்டது. 

நேற்று இரவு 7 மணி அளவில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, திட உணவு சாப்பிடவும், நடக்கவும் டாக்டர்கள் அனுமதித்ததாகவும், சரத்பவார் தற்போது நலமாக உள்ளதாகவும் மந்திரி நவாப் மாலிக் டுவிட்டரில் தெரிவித்தார்.

Next Story