உத்தரகாண்டில் 25 ஏக்கர் நிலத்தில் பயிரான கோதுமை பயிர்கள் எரிந்து நாசம்
உத்தரகாண்டில் 25 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த கோதுமை பயிர்கள் திடீரென எரிந்து நாசமடைந்தன.
டேராடூன்,
உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் கட்டிமா பகுதியில் கோதுமை பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், திடீரென கோதுமை பயிர்கள் இருந்த வயலில் தீப்பிடித்து கொண்டது.
தீ மளமளவென எரிந்து அடுத்தடுத்து பரவியது. இந்த சம்பவத்தில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கோதுமை பயிர்கள் அனைத்தும் எரிந்து போயின. இந்த தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.
இதுபற்றி தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளார். ஆனால், இந்த தீ விபத்தினால் 20 குடும்பங்கள் வரை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோதுமை பயிர்கள் பற்றி எரிந்ததற்கான காரணம் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை.
Related Tags :
Next Story