அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புனே மாவட்டத்தில் பார்கள் - உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவு


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புனே மாவட்டத்தில்  பார்கள் - உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி  முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2021 4:16 PM IST (Updated: 2 April 2021 4:16 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

மும்பை

மராட்டிய  மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,183 பேருக்குத் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  249 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பும், பலியும் அதிகளவில் பதிவாகி வருகின்றது. தற்போது 3,67,897 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

முதல்வரின் வர்ஷா இல்லத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சில அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கொரோனா தொற்று தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், மராட்டிய மாநிலத்தில் விரைவில் கொரோனா படுக்கைகளுக்குப் பற்றாக்குறை சந்திக்க நேரிடலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மராட்டிய மாநிலம்  புனே மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி  முதல் ஏழு நாட்கள் மூடப்படும் என மற்றும் உணவகங்கள் ஏப்ரல் 3-ந்தேதி  முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேர இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"அடுத்த வெள்ளிக்கிழமை நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும். அடுத்த ஏழு நாட்களுக்கு மத இடங்களும் முழுமையாக மூடப்படும் என்று புனே ஆணையர் சவுரப் ராவ் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை அறிவிக்கும் போது கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;-

பார்கள், ஓட்டல்கள், உணவகங்கள் 7 நாட்கள் மூடப்பட்டிருக்கும், மேலும் பார்சல்கள் மட்டும்  அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்களைத் தவிர வேறு எந்த பொது நிகழ்சியும்  அனுமதிக்கப்படாது. இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் மற்றும் திருமணங்களில் 50 பேர் கலந்து கொள்ளலாம். இது நாளை முதல் நடைமுறைக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறினார்.


Next Story