கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - பொதுமக்களுக்கு கோவா முதல்-மந்திரி வேண்டுகோள்


கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - பொதுமக்களுக்கு கோவா முதல்-மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 April 2021 9:29 PM IST (Updated: 2 April 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவா,

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இன்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,584 ஆக உள்ளது. மேலும் 1,914 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Next Story