உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 9:58 PM IST (Updated: 2 April 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜான்சி, 

கடந்த மாதம் 19-ந் தேதி, உத்தரபிரதேசம் வழியாக ஒடிசாவுக்கு 2 கேரள கன்னியாஸ்திரிகள் 2 பெண்களுடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்த 2 பெண்களையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்வதாக பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.

அதனால், உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ரெயில்வே போலீசார், கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். அது பொய் புகார் என்று தெரிய வந்ததால், அடுத்த ரெயிலில் 4 பேரையும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், இதில் சம்பந்தப்பட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த 2 பேர் நேற்று ஜான்சி ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சரியாக விசாரிக்காமல், கன்னியாஸ்திரிகளை விட்டு விட்டதாகவும், இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் 2 பேரும் ஜான்சி ரெயில் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் அஞ்சல் அர்ஜாரியா, புருக்ஸ் அம்ரயா என்று தெரிய வந்தது.

Next Story