80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 6 கோடியே 44 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
80 நாடுகளுக்கு டோஸ்’ தடுப்பூசிகளை அனுப்பி இருக்கிறோம், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக நடந்து வரும் இத்திட்டத்தை உலக நாடுகள் விரும்புகின்றன. இதன்படி, 80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 6 கோடியே 44 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை அனுப்பி உள்ளோம்.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து விட்டுத்தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்படும் என்று எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதை உலக நாடுகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதற்காக தடுப்பூசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story