மைசூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கேமராக்கள் மூலம் கண்டறிந்து அபராதம் விதிப்பு - ஒரே நாளில் 59 ஆயிரம் ரூபாய் வசூல்


மைசூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கேமராக்கள் மூலம் கண்டறிந்து அபராதம் விதிப்பு - ஒரே நாளில் 59 ஆயிரம் ரூபாய் வசூல்
x
தினத்தந்தி 3 April 2021 12:29 AM IST (Updated: 3 April 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கேமராக்கள் மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டதில் ஒரே நாளில் 59 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரு,

மைசூரு மாநகர போலீசார், மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க புதிய நடைமுறையை கையாண்டு வருகிறார்கள். அதன்படி மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும், அவர்கள் தாங்களாகவே முன்வந்து அபராத தொகையை போலீசாரிடம் செலுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.59 ஆயிரத்து 700 அபராதம் வசூலாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது மைசூரு மாநகரில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 10 இடங்களில் போலீசார் அபராத வசூல் மையங்களை நடத்தினர். அதில் 202 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகன எண்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து அபராத தொகையை செலுத்தி உள்ளனர். அந்த அபராத தொகைதான் ரூ.59 ஆயிரத்து 700 ஆகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story