நந்திகிராமில் மம்தா தோல்வி அடைவாா்: பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி


நந்திகிராமில் மம்தா தோல்வி அடைவாா்: பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
x
தினத்தந்தி 3 April 2021 1:02 AM IST (Updated: 3 April 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

3-ம் கட்ட தேர்தல்

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் இரு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 3-வது கட்ட தேர்தல் 31 தொகுதிகளுக்கு வருகிற 6-ந் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தின் வடக்கு எல்லையில், எல்லை தாண்டி சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை திரிணாமுல் அரசு ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை

மம்தா பானர்ஜி மிரட்டி பணம் பறித்தல், சர்வாதிகாரம் ஆகிய ஆயுதங்கள் மூலம்தான் ஆட்சி நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதுவரை நடந்த முதல் இரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெறும். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைவார்.

இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின், வடக்கு வங்காள மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்படும். புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story