மும்பை-ஆமதாபாத் தேஜஸ் ரெயில் சேவை ஒரு மாதம் ரத்து - மேற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக மும்பை-ஆமதாபாத் தேஜஸ் ரெயில் சேவை ஒரு மாதம் ரத்து செய்யப்படுவதாக மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மும்பை,
மும்பை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ரெயில் சேவை ஒரு மாத காலத்துக்கு ரத்து செய்ப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேற்கு ரெயில்வே மும்பை பிரிவு மேலாளர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மும்பை சென்டிரல்-ஆமதாபாத் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-ந் தேதி (நேற்று) முதல் ஒரு மாதம் வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர், இரு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ரெயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும். எனவே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story