கோவில்களில் திருடிய 2 பேர் கைது; மனம் திருந்தி பணத்தை உண்டியலில் போட வந்தபோது சிக்கினர்


கோவில்களில் திருடிய 2 பேர் கைது; மனம் திருந்தி பணத்தை உண்டியலில் போட வந்தபோது சிக்கினர்
x
தினத்தந்தி 3 April 2021 3:18 AM IST (Updated: 3 April 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மனம் திருந்தி பணத்தை உண்டியலில் போட வந்தபோது சிக்கினர்.

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே எம்மகரே பகுதியில் பப்புசாமி கோவில் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். 

இந்தநிலையில் பப்புசாமி கோவிலுக்குள் 2 பேர் வந்தனர். அவர்கள், தாங்கள் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று கோவில் உண்டியலில் பணத்தை காணிக்கையாக போட்டனர். இதனை கவனித்த கோவிலில் இருந்தவர்கள், என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது 2 பேரும், அவர்களிடம் ஜோகட்டே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகீம், அப்துல் தவ்பீக் ஆகிய நாங்கள் இந்த கோவில் உள்பட பல கோவில்களில் உண்டியல் பணத்தை திருடுவதை தொழிலாக வைத்து இருந்தோம். 

தற்போது நாங்கள் 2 பேரும் மனம் திருந்தி திருட்டு தொழிலை கைவிட்டுவிட்டு கோவிலில் மன்னிப்பு கேட்டு திருடிய பணத்ைத உண்டியலில் போட வந்தோம் என்றனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பாண்டேஸ்வர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் திருடி வந்த 2 பேர், மனம் திருந்தி திருடிய கோவில் உண்டியலில் பணத்தை போட வந்தபோது சிக்கிய ருசிகர சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story