இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது-தொற்றுக்கு மேலும் 714 பேர் பலி
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 714- பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 714- பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. இன்று தொடர்ந்து 24-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 89 ஆயிரத்து 129- பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முந்தைய நாளில் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 714 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story