பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்


பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்
x
தினத்தந்தி 3 April 2021 8:18 AM GMT (Updated: 3 April 2021 8:18 AM GMT)

பண்ணைகளில் கூலி தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் கொடுக்கப்படுகிறது என மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

மார்ச் 17 அன்று பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில்,

பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பண்ணைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு  நீண்ட நேரம் வேலைகளை செய்ய போது மருந்து வழங்கப்படுகிறது.  2019-20 ஆம் ஆண்டில், பஞ்சாபின் எல்லை மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற 58 தொழிலாளர்களை எல்லைபாதுகாப்பு படை கைது செய்து உள்ளது இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், பெரோசெபூர் மற்றும் அபோஹார் எல்லைப் பகுதிகளிலிருந்து எல்லைபாதுகாப்பு  படை கைது செய்யப்பட்ட 58 பேர் குறித்து கடிதத்தில் குறிப்பிடுகையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது  ​​அவர்களில் பெரும்பாலோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்கள் பலவீனமான மனநிலையில் இருந்தனர். அவர்கள் பஞ்சாபின் எல்லை கிராமங்களில் விவசாயிகளுடன் பிணைக்கப்பட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஏழை குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறி உள்ளது.

இந்த கடிதம் மத்திய புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாய  தலைவர்களிடமிருந்து கடுமையான கோபத்தை தூண்டி உள்ளது. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் ஜக்மோகன் சிங், இது குறித்து கூறும் போது விவசாயிகளின் நன்மதிப்பை  கெடுக்க மத்திய அரசௌ முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

முன்னாள் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) இந்த கடிதம் "மாநில விவசாயிகளை அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்ட அபத்தங்களை   அடிப்படையாகக் கொண்டது என கூறி உள்ளது.

Next Story