கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் டெல்லி துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் டெல்லி துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா
x
தினத்தந்தி 3 April 2021 1:49 PM IST (Updated: 3 April 2021 1:49 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா சிசோடியா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

டெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் நேற்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.  இதில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.   

இந்நிலையில், டெல்லி துணை முதல்மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியாவும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று போட்டுக்கொண்டார்.

முன்னதாக, மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் இன்று போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story