வங்காளத்தை பிளவுபடுத்த பாஜக முயலுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


வங்காளத்தை பிளவுபடுத்த பாஜக முயலுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 April 2021 12:11 PM GMT (Updated: 3 April 2021 12:11 PM GMT)

வங்காளத்தை மீண்டும் பிளக்க பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்காளத்தை பிரிக்க சதி நடக்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல் - மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

''வங்காளத்தை மீண்டும் பிளவு படுத்த பாஜக முயலுகிறது. மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வங்காளத்தை பிரிக்க சதி நடக்கிறது. மீண்டும் வங்கப் பிரிவினை நடப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதற்கு வங்காளம் மக்கள் இதற்கு துணை போய் விடாதீர்கள். மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் தங்கள் வாக்குகள் பிரிவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனக் கூறினார்.

Next Story