இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 15-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்


இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 15-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
x
தினத்தந்தி 3 April 2021 8:34 PM IST (Updated: 3 April 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

சிம்லா,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் அம்மாநில அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மாநிலத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுகிறது.
எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 64 ஆயிரத்து 420 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story