பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த தொண்டர்: தக்க சமயத்தில் உதவிய பிரதமர் மோடி!


பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த தொண்டர்: தக்க சமயத்தில் உதவிய பிரதமர் மோடி!
x
தினத்தந்தி 3 April 2021 8:48 PM IST (Updated: 3 April 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த தொண்டர் ஒருவருக்கு பிரதமர் மோடி தக்க சமயத்தில் உதவிய சம்பவம் தொண்டர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 6ம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மே இரண்டாம் தேதி முடிவுகள் அறிவிக்கப் படும் நிலையில் தற்போது பிரச்சாரம் முடிவை எட்ட உள்ளது. 

இந்நிலையில் பிரதமர் செய்த செயல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரதமரின் மனிதாபிமான செயல் இன்று மதிய வெயிலில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றி கொண்டிருந்தபோது பாஜகவின் அசாம் தொண்டர் ஒருவர் நீர் சத்து குறைபாடு காரணமாக திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

இதனை கவனித்த பிரதமர் மோடி உடனடியாக பிரசாரத்தில் நடுவே 'நமது தொண்டர் ஒருவருக்கு நீர் சத்து குறைபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நமது அவசர உதவி மருத்துவ உதவி குழு எங்கிருந்தாலும் உடனே வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஒலிப்பெருக்கி மூலமாகவே அறிவித்தார். பிரதமரின் இந்த செயல் கூட்டத்தில் கர ஒலி மற்றும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story