மராட்டிய மாநிலம்: 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
கொரோனா பரவல் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில், 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில், தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருகிறது.
இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனிடையே இன்று இந்தியாவில் ஒரே நாளில் 89,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் மராட்டியம், டெல்லி, கோவா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில், 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு வைக்காமல் தேர்ச்சி பெறவைத்து உயர்வகுப்புகளுக்கு அனுப்புமாறு மராட்டிய கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 49,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,53,523 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story