இந்தியாவில் இதுவரை 7.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் இதுவரை 7.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரையில் 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசியின் முதல் டோஸ் 6 கோடியே 30 லட்சத்து 81 ஆயிரத்து 589 பேருக்கும், இரண்டாவது டோஸ் 99 லட்சத்து 72 ஆயிரத்து 706 பேருக்கும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் 89 லட்சத்து 32 ஆயிரத்து 642 பேருக்கும், இரண்டாவது டோஸ் 52 லட்சத்து 96 ஆயிரத்து 666 பேருக்கும், முன்களப்பணியாளர்களில் முதல் டோஸ் 95 லட்சத்து 71 ஆயிரத்து 610 பேருக்கும், இரண்டாவது டோஸ் 39 லட்சத்து 92 ஆயிரத்து 94 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டோரில் 4 கோடியே 45 லட்சத்து 77 ஆயிரத்து 337 பேருக்கு முதல் டோஸ், 6 லட்சத்து 83 ஆயிரத்து 946 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தின் 77-வது நாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 30 லட்சத்து 93 ஆயிரத்து 795 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 779 பேருக்கு முதல் டோஸ், 2 லட்சத்து 6 ஆயிரத்து 16 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story