கைதான 5 நாட்களுக்கு பிறகு சச்சின் வாசே வங்கி கணக்கில் இருந்து ரூ.26½ லட்சம் எடுக்கப்பட்டு உள்ளது; கோர்ட்டில் என்.ஐ.ஏ. தகவல்


கைதான 5 நாட்களுக்கு பிறகு சச்சின் வாசே வங்கி கணக்கில் இருந்து ரூ.26½ லட்சம் எடுக்கப்பட்டு உள்ளது; கோர்ட்டில் என்.ஐ.ஏ. தகவல்
x
தினத்தந்தி 4 April 2021 1:41 AM IST (Updated: 4 April 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் வழக்கிலும், அந்த காரின் உரிமையாளர் ஹிரன் மன்சுக் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது கோர்ட்டில் சச்சின் வாசே குறித்து சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சச்சின் வாசேக்கும், அவரது உதவியாளர் பெயரிலும் வெர்சோவாவில் உள்ள கூட்டு வங்கி கணக்கு உள்ளது. சச்சின் வாசே கைதான 5 நாட்களுக்கு பிறகு, இந்த வங்கி கணக்கில் இருந்து ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டு வங்கி கணக்கின் வங்கி லாக்கரில் இருந்து, ஒரு சட்டவிரோத பொருளும் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story