பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில்குமாருக்கு கொரோனா; வீட்டு தனிமையில் சிகிச்சை


பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில்குமார்.
x
பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில்குமார்.
தினத்தந்தி 4 April 2021 2:39 AM IST (Updated: 4 April 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கார்கலா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு: கார்கலா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கியது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக மக்கள் பிரதிநிதிகள் யாரும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தனர்.

தற்போது மீண்டும் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தாக்க தொடங்கி உள்ளது. சமீபத்தில் பெங்களூரு ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சுனில்குமார் எம்.எல்.ஏ.

உடுப்பி மாவட்டம் கார்கலா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சுனில்குமார். இவர் கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதனால் சுனில்குமார் எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். 

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுனில்குமார் எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டர்கள் அறிவுரையின்பேரில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Next Story