தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான மோதலில் மாயமான 14 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு + "||" + ANI reporter on the ground sees 14 bodies recovered from the site of Sukma Naxal attack in Chhattisgarh; details awaited

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான மோதலில் மாயமான 14 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான மோதலில் மாயமான 14 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு
சுக்மா பகுதியில் நேற்று நக்சலைட்டுகள் உடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராய்பூர்,

சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பிஜாப்பூர் மாவட்டத்தின் தரம் காட்டுப்பகுதியில் நேற்று சிறப்பு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுக்மா மற்றும் பிஜாப்பூர் எ்லலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த காட்டுப்பகுதியில் அவர்கள் நக்சலைட்டு எதிர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். 30 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த  வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று என்கவுன்டரில் ஈடுபட்ட வீரர்களில் 15 பேரை காணவில்லை என முதல்கட்டமாக செய்தி வெளியாகி இருந்தது. உடனடியாக கூடுதல் படையினர் மாயமான வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில், மாயமான வீரர்கள் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் பலி, 25 பேர் காயம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
2. அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
3. அமெரிக்காவின் நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, இருவர் காயம்
அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகின்றன.
4. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர்.
5. அமெரிக்காவில் பரபரப்பு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சாவு
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்