அசாம் கடைசி கட்டத் தேர்தல்: மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது
அசாம் மாநிலத்தில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
கவுகாத்தி,
மேற்கு வங்கம் மற்றும் அசாமில் ஏற்கெனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அசாமில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 3-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-ம் தேதி நடைபெறுகிறது.
அசாமில் நடைபெறும் 3-ம் கட்ட வாக்குப்பதிவின்போது தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story