ரமேஷ் ஜார்கிகோளி மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி.க்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் புகார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி எஸ்.ஐ.டி.க்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
தீவிரமாக விசாரணை
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வெளியாக கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருந்த இளம்பெண், பெங்களூரு போலீசில் பாலியல் புகார் கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபாச வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார்.
ரமேஷ் ஜார்கிகோளி மீதான பாலியல் புகார் குறித்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டுள்ளது. ரமேஷ் ஜார்கிகோளி இதுவரை கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி மீதான பாலியல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணை
அந்தமனு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ரமேஷ் ஜார்கிகோளி மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை மூடிய உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்.ஐ.டி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story