மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள்’; சர்ச்சையை கிளப்பிய பா.ஜனதா தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள்’; சர்ச்சையை கிளப்பிய பா.ஜனதா தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 April 2021 4:44 AM IST (Updated: 6 April 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்ட பா.ஜனதா தலைவரான துருவா சகா, நேற்று முன்தினம் நானூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ‘மே 2-ந்தேதி மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்புவோர் அதன்பிறகு போலீஸ் என்கவுண்ட்டரை (சுட்டுக்கொல்லப்படுவர்) சந்திக்க நேரிடும்’ எனக்கூறினார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து துருவா சகாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னதாக பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் உரை ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் நிற்கும் அந்த ஆதரவாளர்களிடம் அவர், ‘இந்தியாவின் 30 சதவீத முஸ்லிம்களும் இணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும்’ என்று கூறுகிறார்.

இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவர் தங்கள் கட்சி தொண்டர் அல்ல என திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த சூழலில் துருவா சர்மாவின் உரை வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story