கேரளாவில் 10:15 மணி நிலவரப்படி 21.5 சதவீத வாக்குகள் பதிவு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 6 April 2021 5:23 AM GMT (Updated: 6 April 2021 5:23 AM GMT)

காலை 9:11 மணி வரை மேற்கு வங்காளத்தில் - 4.88 சதவீத வாக்குகளும் அசாமில் - 0.93 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது


புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் 337 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். 

அதே சமயம் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 9:11 மணி வரை  மேற்கு வங்காளத்தில்  - 4.88 சதவீத வாக்குகளும் அசாமில் - 0.93 சதவீத  வாக்குகளும் பதிவாகி உள்ளது

காலை 10.05  மணி வரை கேரளாவில்  21.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Next Story