தேசிய செய்திகள்

டெல்லியில் அதிபட்ச அளவாக ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Delhi Reports 5,100 Covid Cases In Biggest One-Day Spike This Year

டெல்லியில் அதிபட்ச அளவாக ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் அதிபட்ச அளவாக ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 5,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,85,062 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,113 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,340 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,56,617 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 17,332 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 4,524 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
2. இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 6,456 பேருக்கு தொற்று உறுதி
முழு ஊரடங்கு காரணமாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. டெல்லியில் மே 24 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 4,077 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.