யஷ்வந்தபுரம்-விஜயாப்புரா இடையே முன்பதிவில்லா தினசரி சிறப்பு ரெயில்கள் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
யஷ்வந்தபுரம்-விஜயாப்புரா இடையே முன்பதிவில்லாத தினசரி சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது. தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு,
உப்பள்ளி-சித்ரதுர்கா இடையே வருகிற 10-ந் தேதி முதல் இருமார்க்கமாக முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி காலை 7.15 மணிக்கு உப்பள்ளியில் இருந்து புறப்படும் ரெயில்(07347) மதியம் 1.35 மணிக்கு சித்ரதுர்காவை சென்றடையும். மறுமார்க்கமாக சித்ரதுர்காவில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில்(07348) இரவு 9.30 மணிக்கு உப்பள்ளிக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் குந்துகோல், சவுன்சி, குடகேரி, கலசா, யல்விகி, சவனூர், கலசூர், கரஜிகி, ஹாவேரி, பேடகி, தேவரகுட்டா, ராணிபென்னூர், செல்லகேரி, ஹரிஹரா, தாவணகெரே, தோலஉன்சே, அனுமனஹள்ளி, கடுகனூர், மாயகொண்டா, சசலு, சிக்ஜாஜூர், சிக்கந்தவாடி, அம்ரிதபுரா, பெட்டநாகேஹள்ளி, ஹலியூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூரு-தாளகொப்பா இடையே இருமார்க்கமாக முன்பதிவில்லா ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 10-ந் தேதி முதல் தினமும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(02335) இயங்குகிறது. தினமும் காலை 10.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 6 மணிக்கு தாளகொப்பாவை சென்றடையும். மறுமார்க்கமாக 11-ந் தேதி முதல் தாளகொப்பா-மைசூரு இடையே ரெயில் (02336) இயங்க உள்ளது. தினமும் காலை 8.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.50 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கே.ஆர்.நகர், அக்கிலேபாலு, பீருஹள்ளி, மண்டகெரே, ஒலேநரசிப்புரா, ஹாசன், அரிசிகெரே, பானவாரா, தேவனூர், கடூர், பீரூர், தரிகெரே, பத்ராவதி, சிவமொக்கா, சிவமொக்கா டவுன், கர்னஹள்ளி, கும்சி, அரசாலு, அனந்தபுரம், சாகர் ஜம்பகாரு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூரு யஷ்வந்தபுரம்- விஜயாப்புரா இடையே தினமும் இருமார்க்கமாக முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளது. அதன்படி வருகிற 10-ந் தேதி முதல் யஷ்வந்தபுரத்தில் இருந்து விஜயாப்புராவுக்கு ரெயில்(06541) இயங்குகிறது. தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 11.40 மணிக்கு விஜயாப்புராவை சென்றடைகிறது. மறுமார்க்கமாக 11-ந் தேதி முதல் விஜயாப்புராவில் இருந்து யஷ்வந்தபுரத்திற்கு ரெயில்(06542) இயங்க உள்ளது. தினமும் இரவு 7 மணிக்கு விஜயாப்புராவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 10.20 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் துமகூரு, திப்தூர், அரிசிகெரே, கடூர், சிக்கஜாஜூர், தாவணகெரே, அரப்பனஹள்ளி, கொட்டூர், அகரி பொம்மனஹள்ளி, மரியம்மனஹள்ளி, ஒசப்பேட்டே, கொப்பல், மல்லாப்பூர், ஒலேஆலூர், பாதாமி, குலேதகுட்டா ரோடு, பாகல்கோட்டை, அலமட்டி, பசவனபாகேவாடி ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story