போக்குவரத்து ஊழியர்களுக்கு 6-வது ஊதிய குழுப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது - முதல்-மந்திரி எடியூரப்பா


போக்குவரத்து ஊழியர்களுக்கு 6-வது ஊதிய குழுப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது - முதல்-மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 7 April 2021 3:02 AM IST (Updated: 7 April 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து ஊழியர்களுக்கு 6-வது ஊதிய குழுப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

சாத்தியமே இல்லை

  அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க கோரி இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்பது போல் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த கோரிக்கையை முதல்-மந்திரி எடியூரப்பாவும் நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்குமாறு கேட்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க முடியாது. இது சாத்தியமே இல்லை. 8 சதவீத சம்பள உயர்வு வழங்குகிறோம்.

கடும் நடவடிக்கை

  ஊழியர்கள் உள்நோக்கத்துடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பணிக்கு ஆஜராகி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story