கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி


கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
x
தினத்தந்தி 7 April 2021 6:24 AM IST (Updated: 7 April 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சவுபிபூர் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ராணி தேவி (வயது 81).  இவர் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, இதுவரை இங்கு எந்த தலைவரும் எதுவும் செய்ததில்லை.  அதனால் நான் போட்டியிடுகிறேன்.  தேவையான மாற்றங்கள் எல்லாவற்றையும் நான் கொண்டு வருவேன்.  கிராமத்திற்கு வேண்டிய சிறந்த வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.

Next Story