மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: நக்சலைட்டுகள் அறிக்கை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 April 2021 2:47 AM GMT (Updated: 7 April 2021 2:47 AM GMT)

தங்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஒரு வீரரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, நக்சலைட்டுகளுடன் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில், பாதுகாப்பு படையினர் 24 பேர் பலியானார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர் ஒருவர்  மாயமானார். அவரை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வந்தது. 

இந்த நிலையில், நக்சலைட்டுகள் தரப்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு வீரர் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள நக்சலைட்டுகள் அவரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுக்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் எதிரிகள் இல்லை எனவும் தெரிவித்துள்ள நக்சலைட்டுகள், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

Next Story